search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகை அணையின் நீர்மட்டம்"

    • பரிசல் பயணம் தொடக்கம்
    • பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் பரிசல் மூலம் சென்று வருகின்றனர்.

    சிறுமுகை:

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டி உள்ள கேரளம் மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது.

    இதனால் 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து பவானி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக கடந்த 5 நாள்களுக்கு மேலாக பவானி ஆற்றில் 10ஆயிரம் கனஅடிக்கு குறையாமல் தண்ணீர் சென்று கொண்டு உள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்ததால் பில்லூர் அணையில் இருந்து 6,500 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டது.

    இருப்பினும் பவானி ஆறு வழியாகவும், நீலகிரி மாவட்டம் மாயாறு வழியாகவும் பவானிசாகர் அணைக்கு செல்லும் தண்ணீரின் அளவு அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது.

    இதனால் அணையின் நீர்த்தேக்க பகுதிகளான சிறுமுகை, லிங்காபுரம், காந்தவயல் பகுதியில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியது.

    இதனால், லிங்காபுரத்தில் இருந்து காந்தவயல், காந்தையூர், மேலூர், ஆலூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலை பாலம் மூழ்கியதால் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, மேற்கண்ட 4 கிராம மக்கள் சென்றுவர பரிசல் பயணம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மேற்கண்டகிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் பரிசல் மூலம் சென்று வருகின்றனர். இதனிடையே, இந்த பகுதி மக்களுக்கு விரையில் உயர்மட்ட பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் கொண்டது வைகை அணை
    • திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் . வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையிலிருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டது.

    அதன் பின்பு மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது. 67 அடி வரை இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 60.27 அடியாக உள்ளது. நீர்வரத்து இல்லை. பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3653 மி.கனஅடி யாக உள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.75 அடி, வரத்து 137 கனஅடி, திறப்பு 400 கனஅடி, இருப்பு 5107 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.40 அடி, வரத்து 23 கனஅடி, சோத்துப்பாறை நீர்மட்டம் 86.92 அடி, திறப்பு 3 கனஅடி.

    ×